Vasi secrets

 SHIVA GURU SPARK VASI YOGA 🧘‍♂️



வாசியோக ரகசியம் .

உடைக்கப்படுகிறது

##################


வாசியோகம் என்பது அடுப்பில் நெருப்பு முட்டுவது போல்..மிக எளிமையானது..அடுப்பில் இருக்கும் வெப்பத்தை எப்படி தீ பிடிக்க வைப்போம்?


ஒரு ஊதுகுழல் உதவியுடன்...

அடுப்பில் உள்ள துவாரத்தில்..ஒரு லயத்துடன் காற்றை ஊதிவிட..சிறு பொறியாக இருந்தது... நெருப்பாக மாறும்..அல்லவா..


அப்படித்தான் வாசியோகமும்..


நமது உடல் என்ற அடுப்பில் .((உடல் சூடாகவே இருப்பதால் அடுப்புடன் ஒப்பிட்டேன்)))எந்த இடத்தில் ஊதினால் நமது உடலின் 

வெப்பத்தை அதிகரிக்கமுடியுமோ???

அந்த  இடத்தில் ஊத வேண்டும்..


எந்த இடத்தில் ஊத வேண்டும்????

எப்படி ஊத வேண்டும்????


சூட்சும நாடியில் ஊத வேண்டும்..

ஊமையெழுத்தின் ஓசை கொண்டு ஊத வேண்டும்...


இந்த  சூட்சுமநாடி எங்கு உள்ளது என்று காட்டிக்கொடுக்கவும்..

இந்த  ஊமையெழுத்தை எப்படி ஓத வேண்டும் என்று கற்றுத்தறுபவரே

குரு....


இடாநாடி.. பிங்கலாநாடி.. சூட்சமநாடி

என்ற மூன்றுநாடிகள் பற்றி அனைவரும் அறிந்ததே....நமது நாசித்துவாரங்கள் (மூக்கு துவாரங்கள்)தான் 

இடா..பிங்கலா நாடிகள்..


அப்படியென்றால் இந்த சூட்சமநாடியும்

நமது உடலில் காற்று வந்துபோகும் துவாரமாகத்தான் இருக்க வேண்டும்....நமது மூக்குப்பகுதியைத் தவிர வேறு எந்த இடத்தில் காற்று வந்துபோகிறது???


பிரம்மரந்திர துவாரம்..

**இதுதான் சூட்சுமநாடி**


பிரம்மரந்திரம் என்பது ""தலை""

தலையில்...கண்கள் இருக்குமிடம் துவாரம் தான்..காது இருக்குமிடம்

துவாரம் தான்...ஆனால் இந்த துவாரங்களின் வழியாக காற்று வந்துபோவதில்லை...


மூக்கு தவிர காற்று பயனிக்கும் மற்றொரு துவாரம்...

உள்நாக்குஓட்டை*(அண்ணாக்கு மேல் பகுதியில் உள்ள  ஓட்டை)

இந்த  இடம் தான் சூழ்முனை

என்ற சூட்சும நாடி....இந்த நாடி ஓடும் 

இடம் தான் பிரம்மரந்திர துவாரம்..


இந்த  துவாரத்தின் வழியாக ஊமையெழுத்தை ஓத..ஊத வேண்டும்..ஏப்படி????.


""சிவயநம"" ஐந்தெழுத்தை அஞ்சாக வகை பிரிக்கிறார்கள்: 

பரு ஐந்தெழுத்து (தூல பஞ்சாக்கரம்), நுண் ஐந்தெழுத்து (சூக்கும பஞ்சாக்கரம்), மீநுண் ஐந்தெழுத்து (அதிசூக்கும பஞ்சாக்கரம்), காரண ஐந்தெழுத்து (காரண பஞ்சாக்கரம்), பெருங்காரண ஐந்தெழுத்து (மகாகாரண பஞ்சாக்கரம்).


எழுத்தோடு சொல்வதென்றால் ‘நமசிவாய’ என்பது பரு ஐந்தெழுத்து; ‘சிவாயநம’ என்பது நுண் ஐந்தெழுத்து, ‘சிவாய’ என்பது மீநுண் ஐந்தெழுத்து, ‘சிவ’ என்பது காரண ஐந்தெழுத்து, ‘சி’ என்பது பெருங்காரண ஐந்தெழுத்து


  இந்தப் பெருங்காரண ஐந்தெழுத்தை ‘நாயோட்டு மந்திரம்’ என்கிறார் திருமூலர். அதென்ன நாயோட்டு மந்திரம்? தெருவில் போகையில்  நாய் குரைத்தால் எப்படி ஓட்டுவீர்கள்? ‘சி’ என்றுதானே?


நாய்ஓட்டும் மந்திரம் நான்மறை நால்வேதம்;


நாய்ஓட்டும் மந்திரம் நாதன் இருப்பிடம்;


நாய்ஓட்டும் மந்திரம் நாதஅந்தம் ஆம்சோதி;


நாய்ஓட்டும் மந்திரம் நாம்அறி யோமே. (திருமந்திரம், 3051)


நால்வேதப் பொருள் என்கிறார்கள். என்ன பெரிய நால்வேதப் பொருள்? எல்லாம் வெறும் நாயோட்டும் மந்திரந்தான். இறைவன் இருப்பதே நாயோட்டும் மந்திரத்தில்தான். ‘சி’ என்னும் நாயோட்டும் மந்திரம் வேத மந்திரங்களைப்போல வாய் திறந்து எழுப்பும் ஒலிக்குறிப்பன்று; அது எல்லா ஒலிகளும் முடியுமிடம். நாளும் நம்மில் இயங்கிக்கொண்டிருக்கும் அதை அறிந்தோமா நாம்?


‘சி’ நாளும் நம்மில் இயங்குகிறதா? எங்கே? நம் வாங்கிவிடும் மூச்சாக. மூச்சின் ஒலியான ‘சி’, வாய் திறந்து பேசாத மந்திரம்; ஊமை எழுத்து; நெஞ்செழுத்து.


அஞ்சுஎழுத்தி லேபிறந்து, அஞ்சுஎழுத்தி லேவளர்ந்து,


அஞ்சுஎழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள்!


அஞ்சுஎழுத்தில் ஓர்எழுத்து அறிந்துகூற வல்லிரேல்


அஞ்சல்அஞ்சல் என்றுநாதன் அம்பலத்தில் ஆடுமே!


(சிவவாக்கியர், யோகநிலை 20)


என்று பாடுகிறார் சிவவாக்கியர். அஞ்சு மலங்களின் காரணமாக, அஞ்சு பூதங்களால் பிறந்து, அஞ்சு புலன்களில் வளர்ந்து, ஐந்தெழுத்தை ஓதுகின்ற அறியாதவர்களே! ஐந்தெழுத்தில் ‘சி’ என்னும் ஓர் எழுத்தை, அதாவது மூச்சை, அதன் பயனை அறிந்து ஓதியிருந்தால், அஞ்சாதே என்று அம்பலத்தான் வந்து ஆடியிருக்க மாட்டானா?..


"சி"காரம் தான் ஊமையெழுத்து...

அது சரி...சி..என்று ஒலி எழுப்பினால் அது எப்படி ஊமையெழுத்து ஆகும்???

சிந்தியுங்கள்...


"ந ம வ ய" இந்த எழுத்துக்களை உச்சரிக்க காற்று தேவைப்படாது.

"சி"என்று சொல்லுப்பாருங்கள். 

முதலில் ""ஸ்"""என்று காற்றுதான்

வரும்..அதோடு.. யிறகு '""இ"""சேர்ந்து 

-

ஸ்+இ=சி...இப்படித்தான்" சி" உருவானது....


இதனால் தான் "சி"காரம் ஊமையெழுத்தானது


" "ஸ்""என்பது காற்றின் ஓசை

காற்றின் சத்தம் "ஸ்ஸ்ஸ்ஸ்'"


பிரம்மரந்திரதுவாரம் வழியாக

""ஸ்"" என்று காற்றை ஊத வேண்டும்.

இப்படி ஊதுவதைத்தான் உள் சுவாசம் என்பர்...இவ்வாறாக பயிற்சி செய்துவர.நீங்கள் ஊதும் விதம்  ஒரே

சுருதியில் ஓடும்..இதைத்தான்

வாசி..வசப்பட்டது என்பர்


SHIVA GURU SPARK VASI YOGA 🧘‍♂️

Comments

Popular posts from this blog

Chakras kundalini

Sushumna Nadi